தேன்கனி உழவர் வாரசந்தை

தேன்கனி நேரடி உழவர் சந்தை துவக்க விழா

நமது முன்னோர்கள் ( விவசாயிகள்) முன்னொரு காலத்தில் இயற்கை முறையில் தானே உற்பத்தி செய்த விளை பொருள்களை அருகிலுள்ள சந்தைக்கு கொண்டு சென்று , அவர்களே மக்களுக்கு நேரடியாக பண்டமாற்று முறையில் விற்பனை செய்து வந்தனர். அப்படி செய்ததன் விளைவாக விவசாயிகளிடம் என்ன பொருள் கையிருப்பு (Fresh) உள்ளதோ, அதையே மக்கள் உண்டு வந்தனர். நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
பின்னர் அந்த முறையே மாறி மக்கள் என்ன கேட்கிறார்களோ அதையே விவசாயிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தான் ஒரின பயிர் சாகுபடி முறை ( Mono culture ) தொடங்கியது. அதன் விளைவாக பல மூலிகைகளும், பயிர் ரகங்களும் குறைய ஆரம்பித்தது.
பின்னர் பசுமை புரட்சி காலம் மக்கள் மீது திட்டமிட்டே திணிக்கப்பட்டது. இதன் விளைவாக விவசாயிகள் இயற்கை முறையிலிருந்து மாறி, விஷ ( இரசாயண) முறை விவசாயத்துக்கு மாறினார்கள். பின்னர், தான் உற்பத்தி செய்த பொருளை கம்பெனிகளிடமும், இடைத்தரகர்களிடமும் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் விவாசயிகளுக்கும் , மக்களுக்குமான தொடர்பு சங்கிலி அருந்தது. மக்களின் மன் நிலை என்ன ? என்பதை விவசாயிகள் அறிய முடியவில்லை. விவசாயிக்கு என்ன தேவை என்பதை மக்களும் மறந்தனர். இதனால் நோய்கள் பெருகி, நாளடைவில் பல லட்ச பாரம்பரிய உணவு ரகங்களை உணவாக உட்கொண்ட நம் மக்கள் ஒட்டு ரகங்களை உணவாக உட்கொண்டு நோயுறும் நிலை ஏற்பட்ட்து. இந்த நிலை இன்னும் மோசமாக மாறி மரபணு மாற்றப்பட்ட உணவுகளையும், டப்பாகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் விஷம் இதில் கலக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே பல உணவுகள் விற்கப்படுகிறது. இதை உண்ட நம் சந்ததிகள் ஊனமாகவும், நிரந்தர நோயளிகளாகவும் மாற்றப்பட்ட்தோடு நின்றுவிடாமல், உலகத்திற்கே முன்னோடிகளாக வாழ்ந்த நம் சமூகம் இனி தன்னுடைய தலைமுறையை பெருக்க வழியில்லாமல் மலடுகளாக ஆக்கப்பட்டனர்.
மேலும் 2 அரை லட்டசத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய சூழ் நிலை உருவானது. மேலும் தினம் தினம் பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி தினக்கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு யார் காரணம் ? இதை மாற்ற வேண்டாமா... இது நம்முடைய கடமையில்லையா.. வெறும் பணம் மட்டும் சம்பாதித்தால் போதுமா.. நாளைய நம் சந்த்திகளுக்கு விஷ உணவுகளை மட்டுமே கொடுப்பதற்காகவா.. நம் சம்பாதித்த பணம் தேவைப்படப் போகிறது ?.....
இப்படி பல கேள்விகளும், இதற்கு மாற்றுதான் என்ன என்பதைப் புரியாமல் நின்று கொண்டிருந்த நிலையில் தான் இயற்கை விவசாயமும், நஞ்சில்லா பூமியும் தன்னுடைய மூச்சாகவே வாழ்ந்த ”” திரு. கோ. நம்மாழ்வார் ஐயா ”” அவர்களை சந்தித்து வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் பண்ணையில் பயிற்சி பெற்று முதலில் எங்களுடைய குடும்பத்தை இந்த அசுர உலகிலிருந்து மீட்டோம்.
பின்னர் தள்ளாத வயதிலும் முழு நேரமும் சமூகத்துக்காவே பாடுபட்ட நம்மாழ்வார் ஐயாவின் உழைப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக, நாமும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு தோன்ற பல இயற்கை சார்ந்த களப்பணிகளும், கூட்டங்களும் நடத்தி வந்தோம்.

விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.
நகரத்தில் உள்ளவர்கள்:
கிராமத்தில் உள்ள விவசாயி நமக்காத்தான் பாடுபடுகிறார், அவர் நலிவடையக் கூடாது .
விவசாயி :
நகர ( நரக) த்தில் உள்ளவர் நமக்காகவும் கஷ்டப்படுகிறார். அவருக்கு நாம் நஞ்சில்லா உணவுகள் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது, என்கிற எண்ணம் விவசாயிக்கு வர வேண்டும்.
இந்த நம்மாழ்வார் ஐயாவின் வார்த்தை தான் எங்களை இந்த வழிக்கு அழைத்து சென்றது.மேலும் இன்று நம்மாழ்வார் ஐயா போன்ற பல இயற்கை ஆர்வலர்களின் முயற்சியால் இயற்கை வழி விவசாயத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் அந்த இயற்கை விவசாய ரகங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் பல சிரமங்கள் உள்ளது. மேலும் அந்த தானியங்களை சமைக்கும் முறையையும் மக்களுக்கு கொண்டுசெல்ல பல சிக்கல் உள்ளது. அந்த இடர்பாடுகளையெல்லாம் களையும் முயற்சியாகத் நம்முடைய “ நேரடி உழவர் சந்தை “ வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருந்தது.
மேலும் இந்த சந்தை திட்டக் கருத்தை வலுவூட்டும் விதமாக திரு. ம.செந்தமிழன் ( மரபு வழி மருத்துவர் & இனிப்பு குறும்பட தயாரிப்பாளர்) அவர்கள் வெளியிட்ட கட்டுரையும் கூட எங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. எனவே செந்தமிழன் அண்ணன் அவர்களையும் வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம்.
தேன்கனி நேரடி உழவர் சந்தை :
அதை செயல்வடிவமாக மாற்றி கடந்த 2014, மே மாதம் 11ம் நாள், மாலை 6 மணிக்கு சிவகாசியில் “ சிற்பி வாழ்வியல் மையம் “ ஏற்பாடு செய்திருந்த “ இனிப்பு “ என்கிற சர்க்கரை நோயிலிருந்து விடுதலை முகாமில்
சிற்பி வாழ்வியல் மையத்தின் ஒரு சேவைப் பிரிவாக “ தேன்கனி நேரடி உழவர் சந்தை “ தொடங்கப்பட்டது. இதை தொடங்கி வைத்தவர்கள்.
வானகம் பொறுப்பாளர்கள் :

சத்தியமங்கலம் திரு. குமார்,
 திரு . ஏங்கல்ஸ்ராஜா, 
செம்மை வனம் “திரு ம. செந்தமிழன்” ,
சிவகாசி. திரு மாறன் ஜி,
திரு . ஞான சேகர் ,
ஜெ.கருப்பசாமி  
மற்றும் நம்மாழ்வார் ஐயாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து தொடங்கினர்.
இதில் விருதுநகர் மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் இயற்கை உணவு உற்பத்தியாளர்கள், இயற்கை வைத்தியர்கள் என பல உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.
உறுப்பினர்கள் விபரம் :

1. அய்யம்பெருமாள், 2. செபஸ்டின், 3. மாரிராஜன் 4.கருணாகரன், 5. ராஜேஷ் குமார், 6. பாரி, 7. சுதாகர், 8. மாறன் ஜி 9. ஞானசேகர், 10. ரமேஷ் 11. செல்வராஜ் 12. முத்துக்குமார் 13. ஜெ. கருப்பசாமி 14. சங்கர் 15. கார்மேகம், 16. கார்த்திக், 17. டோனி 18. மனோகர்
முதல் நாளிலே விவசாயிகளால் சத்துமிகு தானியங்களான கைகுத்தல் வரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு புழுங்கல் & பச்சரிசி, கீரைகள், காய்கறிகள், பழங்கள், மாப்பிள்ளை சம்பா போன்ற சிகப்பரிசிகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, மூலிகைப் பொடிகள், இயற்கை உணவுகள் மற்றும் தானிய உணவுகள், புத்தகங்கள் போன்ற பல பொருள்கள் அறிமுகப் படுத்தப்பட்டது.
சந்தைப்பணிகள் தொடரும்........
இயற்கை வழி வாழ்வோம், இயற்கைப் புரிந்து வாழ்வோமாக...







வணக்கம், இயற்கை வாழ் மைந்தர்களே,

நமது தேன்கனி இயற்கை விளைபொருள் உழவர் வாரசந்தை 76 வாரமாக மக்களின் பேரன்போடு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சிவகாசி காமராஜர் சிலை அருகில் நடைபெற்று வந்த நமது சந்தை 10-1-16 ஞாயிறு முதல்

சிவகாசி காரனேசன் பள்ளி அருகில் உள்ள இரட்டை சிலைக்கு முன்னால்மாற்றப்படுகிறது.

சிவகாசியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 10-1-2016 காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரை

பூச்சிக்கொல்லி நஞ்சில்லாமல் இயற்கை விவசாய முறையில் விளைவித்த பொருள்களை விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள இயற்கை வழி விவசாயிகளே நேரடியாக சந்தைப் படுத்த
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகத்தின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் “.

கண்காட்சியில் பார்வைக்கு மற்றும் விற்பனைக்கு :
வீட்டிற்குத் தேவையான

சாப்பாடு வகைகள் :
1. கருங்குறுவை புட்டு
2. குதிரைவாலி சாம்பார் சாதம்
3. தினைப் பாயாசம்
4. சாமை முறுக்கு
5. திணை லட்டு
6. எள்ளு லட்டு
7. பாசிபருப்பு லட்டு
8. ஆவாரம் பூ மூலிகை தேநீர்

அவல் வகைகள் :
1. கேழ்வரகு (ராகி) அவல்
2. இறுங்கு சோள அவல்
3. மாப்பிள்ளை சம்பா அவல்

லட்டு வகைகள் :
1. சோளலட்டு
2. வரகு லட்டு
3. குதிரைவாலி லட்டு
4. கேழ்வரகு லட்டு
5. சிகப்பரிசி & சிகப்பு அவல் லட்டு
6. பொரிகடலை லட்டு
7. கடலை , எள் லட்டு

பலசரக்கு வகைகள் :
1. மூங்கில் அரிசி
2. மாப்பிள்ளை சம்பா அரிசி
3. பூங்கார் அரிசி
4 புழுங்கல் தீட்டப்படாத வரகு, சாமை, இரும்பு சோளம், குதிரை வாலி
5. செக்கு நல்லெண்ணைய்
6. கடலை எண்ணைய்
7. நாட்டு சர்க்கரை
8. கருப்பட்டி
9. கறுங்குறுவை அரிசி
10. பொன்னி அரிசி
11. கைக்குத்தல் அவல்
போன்ற பல....
14. ஆவரை தேயிலை போன்ற மருத்துவ குணமுள்ள பல பொருள்களும் கண்காட்சி மற்றும் விற்பனை.
15. பாரம்பரிய சமயைல் புத்தகங்கள்
16. ராகி, கம்பு, வரகு, குதிரை வாலி சேமியா...
17. காய்கறிகள்
18. உளுந்து, பாசி, துவரை, கடலை, வெல்லம், மற்றும் பல...
19. நாட்டுக்கம்பு, தினை, அவல் லட்டு...
20 . குளியல் பொடி, பல்பொடி
22. இந்து உப்பு
23. பொரிகடலை

தோசை கலவை வகைகள் :
24. கம்பு தோசை மிக்ஸ்
25. வரகு தோசை மிக்ஸ்
26. சாமை தோசை மிக்ஸ்
27. குதிரைவாலி தோசை மிக்ஸ்
28. நவதானிய மிக்ஸ்
29. முளைகட்டிய தினை மாவு
30. முளைகட்டிய கேழ்வரகு மாவு
31. முளைகட்டிய கம்பு மாவு
32. பலதானிய அடை மிக்ஸ்
33. கொள்ளு கஞ்சி மிக்ஸ்
34. கேழ்வரகு தோசை மிக்ஸ்

களி வகைகள் :
1. வரகு களி கலவை
2. குதிரைவாலி களி கலவை
3. சாமை களி கலவை

இடம் : காரனேசன் பள்ளி அருகில் உள்ள இரட்டை சிலை, சிவகாசி.

நாள் : 10-1-2016 நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரை

தொடர்புக்கு : 9443575431, 9787648002

1 comment: