மாடித்தோட்டம் & வீட்டுத்தோட்டம்

சிவகாசியில் களப்பயிற்சி



ஆஹா…ஆஹா… சுவையான காய்கறிகள் நம்ம மாடியிலேயா ? …
என்னது? ஆச்சரியமா.. இருக்கே? ….
நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகளை பூச்சிக்கொல்லி நஞ்சு இல்லாமலே.. நாமே தயாரிக்க முடியுமா?.. இதைத்தான் இவ்வளவு நாளா தேடிக்கொண்டிருந்தோம் ?
“ நாம் எதை உண்ணுகிறோமோ ,
அதுவாகவே மாறுகிறோம்”. என்கிற
மகாத்மாவின் வரிகளை நினைவு கொள்ளும் போது தான் தெரிகிறது, மகாத்மா வாங்கி தந்த உண்மையான விடுதலையை நாம தற்போது தான் அடையப் போகிறோம்.
நாம்ம இனி மறுபடியும், நம்ம தாத்தன், பூட்டன், முப்பாட்டன் மாதிரி ஆரோக்கியமா, நீண்ட ஆயுளோட வாழ இக்கணத்திலிருந்தே ஆரம்பிச்சிட்டோம். ” உணவே மருந்து “ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் இப்ப நமக்கும் மறுபடியும் கிடைச்சிருச்சே...... வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரொம்ப சந்தோசம் தான் இனி ..
பசுமைபுரட்சி (இரசாயண) வியாபார விவசாயத்தின் கொடூர தாக்கத்தால், இது நாள் வரை தாய் குழந்தைக்கு அமிர்தம்னு நினைச்சு கொடுத்த முதல் உணவான தாய்பாலிலே பூச்சிக்கொல்லி நஞ்சு கலந்து உள்ளது என்கிற அதிர்ச்சியை இயற்கை ஆர்வலர்களும், மருத்துவர்களும் ஆய்வு அறிக்கைகளும், ஏன் விவசாய விஞ்ஞானிகளும் ஆணித்தனமா சொன்ன பின்னாடி பயந்து போய் இருந்தோம். ஏன்னா.. ” பாலில் ஒரு துளிவிஷம் கலந்தாலும் விஷம் விஷம் தானே....”. இனிமே பயப்பட வேண்டாம் போல...
அதிக விலை கொடுத்து நஞ்சு(விஷம்) கலந்த காய்கறி வாங்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில எங்க அம்மா சமைத்தால் அவ்வளவு சுவையா இருக்கும்னு, அப்பாமார்கள் சளிச்சுக்கிட வேண்டியதில்லை.
ஏன்னா.. தாத்தா காலத்துள கிடைச்ச உணவ இப்ப மீட்டுடோம். நம்ம உணவை நாமே உற்பத்தி செய்யப்போகிறோம். அதனால வழக்க கடைகளில் கிடைக்கும் பூச்சி கொல்லி, இரசாயண நஞ்சு தெளிச்ச உணவு நாம உண்ணப்போறதில்லை.
இனிமே.. இயற்கைமுறையில் தான் விவசாயம் செய்ஞ்சு சாப்பிடப்போறம். . குஞ்சு பொறிக்கத் தெரியாத பிராய்லர் கோழி இனி இருக்காது. விதையில்லாத ப்ப்பாளி போன்ற பழங்கள் கிடைக்காது. பெட்ரோலிய கழிவு கலந்த, ரீபைண்ட் செய்யப்பட்ட, மூட்டுகளுக்கு மஞ்சையை உண்டு பண்னும் நல்ல கொழுப்பை நீக்கப்பட்ட எண்ணெய்கள் கிடைக்காது. வீரிய ரகம் (Hybrids ) என்று சொல்லப்பட்டு வீரியத்தை இழக்கும் காய்கறிகள் ரகங்கள் கிடைக்காது.
நமது ரத்தத்தோடும், வீரத்தோடும், அறிவோடும் தொடர்புடையது நமது முன்னோர்களுடைய மரபணு ( Gene) . சைவ காய்கறிகளில் மாமிச விலங்குகளுடை மரபணுவிலிருந்து தாயாரிக்கப்பட்ட மரபணுமாற்றப்பட்ட அசைவ (BT- Genetically modified seeds ) காய்கறிகளும், பழங்களும் கிடைக்காது. மருந்து மாத்திரைனு கூண்டுக்குள்ளே மாட்டிகிட்டு தப்பிக்க முடியாமல் இருக்க வேண்டியதில்லை. தெருவுக்கு தெரு மருத்துவமனைகள் தேவையில்லை. தினம் தினம் புதுப்புது நோய்கள் வராது.. எல்லா இரசாயண, மருத்துவ கொடூரத்திலிருந்தும் விடுதலை.. விடுதலை... எங்கு நோக்கினும் விடுதலை..
”” ஆடுவோமே பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்ற... ”” பாரதியின் பாடல்களை நிருபிக்கப் போகிறோம்.
இனி ஆரோக்கியமும், குதூகலமும், சந்தோசமும், அனைவரையும் தன் சொந்தம் போல நேசிக்கும் கூட்டு வாழ்க்கையும் மட்டுமே நாம் வாழப்போறம்.
குறைந்தபட்சம் நம்முடைய காய்கறி, கீரைகளையாவது நாமே உற்பத்தி செய்ய முயற்சிக்கப் போகிறோம். அதற்கான எளியவழியை நம்மாழ்வார் ஐயா போன்றோர்களும், தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் , திரைப்படங்களிலும், 36+வயதினிலே போன்ற ஜோதிக பட்த்திலும், கண்முன்னே காட்டிய வீட்டுத்தோட்டம் & மாடித்தோட்டம் தாங்க....
ஒரு குடும்பத்திற்குத் தேவையான உணவை செலவில்லாமல், அதிகப்பட்சம் 100 சதுரஅடி அளவுள்ள மொட்டைமாடியோ அல்லது வீட்டின் கொள்ளைப்புறத்திலோ இருந்தால் கூட போதும். 35வது நாளிலிருந்து கீரைகள், 40 முதல் 70வது நாளிலிருந்து முள்ளங்கி, வெண்டை, சீனிஅவரக்காய், கத்தரிக்காய், தக்காளி, பாவற்காய், புடலை, சுரை, பூசணி, தர்பூசணி போன்ற நாட்டு காய்கறிகளும், சகல நோய்களையும் விரட்டியடிக்கும் தூதுவளை, துளசி, பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவல்லி, சிறியாநங்கை போன்ற மருத்துவ மூலிகைகளும் எளிமையாக விளைவிக்கலாம். அழகு செடிகள், அலங்கார செடிகள் என கவனம் செலுத்தும் நாம் நம் தலைமுறையின் ஆரோக்கியத்தைப் வலுப்படுத்தும் காய்கறிகள், கீரைகள் வளர்க்கப் போகிறோம்.
மாடியில் தோட்டம் அமைத்தால் கான்கீரிட் பலவீனமாகும் என்கிற நிலைகூட இல்லாமல், தற்போது பாதுகாப்புடன் மாடித்தோட்டம் அமைக்க கத்துக்கொடுக்கப் போகிறாங்க “ நம்ம தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் தேன்கனி வாழ்வியல் மையமும் மற்றும் வானகம் கல்வி குழுவும் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்).
இது மாற்றத்தை விரும்புபவர்களுக்கும், மாறத் துடிப்பவர்களுக்கும் மட்டுமே... பயப்படுபவர்களுக்கும், சாக்கு போக்கு கூறுபவர்களுக்கும் கிடையாது....
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம் ,
1834/7/8, PKN ரோடு, 2வது தளம், பழனியாண்டவர் தியேட்டர் பின்புறம், சங்கீதா லாடஜ் முன்புறம், சிவகாசி.
பயிற்சி நன்கொடை : ரூ. 200/- மட்டும்…
பயிற்சியில் பாரம்பரிய விதைகள் வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம்.
முன்பதிவிற்கு : 7094871598, 9843127804,
8056398704, 9944207220
( வேலைப்பளு காரணமாக முன்பதிவு நேரம் காலை 6மணி முதல் 9மணி & மதியம் 2மணி முதல் 3.30 வரை )
களப் பயிற்சியின் முடிவில் தேவைப்படுவோர் மாடித்தோட்டம் அமைக்க பைகள், பாரம்பயிய நாட்டு விதைகள், இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி, இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்கள் & பலசரக்குகள் வாங்கிக் கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவே தசையாகவும், உடலாகவும் & உணர்வாகவும் ஆகிறது. எனவே நல்ல உணர்வுள்ள சந்ததிகளை உருவாக்குவோம்.
வாருங்கள்.. இயற்கையோடு, தன்னம்பிக்கையுடன் வாழும் சமுதாயம் படைக்க….
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேன்கனி மாடித்தோட்டம் குழு சார்பாக....சிவகாசி 725 ஞானகிரி ரோடு,  நேசனல் காலனியில் அமைந்துள்ள திரு ராமநாதன் அவர்களுடைய வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டது.....


திரு ராமநாதன்













திரு.ராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

2 comments:

  1. ‍வணக்கம்.என் பெயர் சஞ்சய், நான் பெங்களூரில் வசிக்கிறேன்.எனக்கு நாட்டு ரக காய் கறிகள், கீரை மற்றும் பழ வகைகளின் விதை வேண்டும். கூரியர் மூலம் அனுப்ப முடிந்தால் எனக்கு தெரிவிக்கவும்.அதற்கு உண்டான தொகையை நான் அனுப்புகிறேன். Mobile-9677264613.
    நன்றி

    ReplyDelete
  2. நான் அருண் குமார் திண்டுக்கல் மாவட்டம். என்னிடம் கேழ்வரகு 100 கிலோ உள்ளது. வாய்ப்பு இருந்தால் வாங்கி உதவி செய்யுங்கள் நன்றி.8754734701

    ReplyDelete