தேன்கனி பாரம்பரிய அறுசுவை ருசியகம்:


( தாய்மார்களின் கைபக்குவத்தில் கலப்படமில்லா வீட்டு சமையல் )

சிவகாசி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. புரோட்டாவும், பால்சோறும் மட்டுமே தொடர்ந்து உண்டு தன்னுடைய வாழ்வில் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களே.. உங்களுக்கான தளம் இது...

“ சின்ன சின்ன மாற்றம் தான் பெரிய சமூகத்தை கட்டமைக்கும் என்று நம்மாழ்வார் ஐயா ” கூறுவது தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது. அப்படி ஏதாவது எங்களை சார்ந்துள்ள சமூகத்துக்கு கைமாற்றி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் தோன்றியது தான் எங்களது அடுத்த பயணம்.
தேன்கனி வாழ்வியல் மையம் என்கிற கூட்டு சமுதாயத்தின் முதல் முயற்சி ” தேன்கனி வார இயற்கை உழவர் சந்தை “. இந்த சந்தை தற்போது 75 வது வார சந்தையை நோக்கிய பயணத்தின் அடுத்த முயற்சி தினசரி பாரம்பரிய உணவகம்.
வானகத்தின் சிறப்பு ஆவாரம்பூ மூலிகை தேநீர், நாட்டுக்கம்பங்கூல், வரகு சம்பார் சாதம், குதிரைவாலி மிளகு தக்காளி சாதம், மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி உப்புமா, முளைகட்டிய பயறுகள், கொள்ளு சுண்டல், யானை நெறிஞ்சில் சாறு, தினசரி இயற்கை விவசாயத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், இன்னும் நாம் மறந்து போன பழைய பாரம்பரிய சுவைகளை உள்ளடக்கிய உணவுகள் என தொடர் முயற்சிகள்.







இடம் :
ரத்தினவிலாஸ் பஸ்ஸடாப் எதிரில், சிவகாசி.
நேரம் :
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30வரை மாலை 5மணி முதல் இரவு 7.30மணி வரை
தொடர்புக்கு : 9843127804, 9787648002

ஒத்த சிந்தனை உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சிக்கு தங்களது மேலான பங்களிப்பை நல்குகிறோம்...

No comments:

Post a Comment